Home உலகம் லொஸ் ஏஞ்சல்ஸை சூறையாடும் காட்டு தீ..! இரத்து செய்யப்படுமா ஒஸ்கார் விழா

லொஸ் ஏஞ்சல்ஸை சூறையாடும் காட்டு தீ..! இரத்து செய்யப்படுமா ஒஸ்கார் விழா

0

உலகில் பிரபலமான ஒஸ்கார்(oscar) விருது வழங்கும் விழா, வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு இரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டு ஒஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டாம் ஹாங்க்ஸ், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்ட்ரீப் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைமையிலான குழு ஒஸ்கார் விருது வழங்கும் விழா, இறுதி முடிவை எடுக்க நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்கார் விருதுகள் விழா

அதேநேரம், லொஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மனவேதனை மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்பதே ஒஸ்கார் விழா ஏற்பாட்டு குழுவின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன், இதற்கான இறுதி பரிந்துரை பட்டியலை, வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் பணியில் அகாடமி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இறுதி பரிந்துரை

அந்தவகையில், 97ஆவது ஒஸ்கார் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியல் எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காட்டுத்தீயால், 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், லொஸ் ஏஞ்சல்ஸை விழுங்கும் காட்டுத்தீயின் கோரம் அடங்காததால், ஆஸ்கார்  விழாவுக்கான இறுதி பரிந்துரைப்பட்டியல் ஜனவரி 23ஆம் திகதி வெளியாகும் என ஒஸ்கர் அறிவித்துள்ளது.

You May like this,

https://www.youtube.com/embed/TsYxyEg8Le0

NO COMMENTS

Exit mobile version