Home இலங்கை அரசியல் அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது : பதிலடி கொடுத்த ஈ.பி.டி.பி

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது : பதிலடி கொடுத்த ஈ.பி.டி.பி

0

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (06.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வேலணை பிரதே சபை தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு கட்சி சார்பானவர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் “குறிப்பாக, 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில தினங்கள் முன்னதாக நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவம் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

உண்மையிலேயே 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த தேர்தல் வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயப்பட்டிருந்தனர். இவ்வாறான சம்பவங்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

இருந்தாலும் குறித்த விவகாரம் தற்போதும் நீதிமன்றில் இருக்கின்ற நிலையில் அதுதொடர்பாக நாம் தற்போதைக்கு எந்தவிதமான கருத்தினையும் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையிலே, எம்மீது சேறடித்தாவது ஈ.பி.டி.பி. கட்சியை வேலணை பிரதேச சபையிலே தோல்வியடைச் செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே இந்த கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க… 

https://www.youtube.com/embed/lFWcMKBj0jQ

NO COMMENTS

Exit mobile version