Home இலங்கை அரசியல் யாழ். நூலகத்தை எரித்த பாவிகள் நாங்கள் அல்ல!

யாழ். நூலகத்தை எரித்த பாவிகள் நாங்கள் அல்ல!

0

இந்த ஆண்டு நடைபெற்ற இரு தேர்தல்களும் இலங்கை வரலாற்றையே மாற்றியமைத்த தேர்தல்களாகும்.

இவ்வாறு வரலாற்றை மாற்றியமைத்த தேர்தல்களுக்கு முக்கிய பங்காளிகளாக இருந்தவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள மக்கள்.

இந்தவகையிலே, யாழ். மாவட்டத்திலுள்ள மக்கள இன்று தேசிய மக்கள் சக்தியின் கையிலே ஆட்சியை ஒப்படைத்திருக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்ததற்கு முக்கிய காரணம் நாங்கள் நம்பககரமானவர்கள் என்பதை நிரூபித்தமையே ஆகும்.

எனினும், தமிழ் மக்களோடு ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கின்றது. அது வேறெதுவுமில்லை. கடந்த 76 ஆண்டு கால வரலாற்றில் உள்ள இனவாதம் வேண்டாம் என்ற நிலைமையெ ஆகும்.

அன்று 1977இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களை அடித்து நொருக்கினார்கள்.

அடுத்து தொடர்ந்து வந்த இரண்டு வருடங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.

அந்த சட்டத்தின் மூலம் இன்று வரை தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு காரணமானவர்கள் தேசிய மக்கள் சக்தி அல்ல.

இதன் தொடர்ச்சியாக 1981இல் யாழ். நூலகத்தை எரித்து பல ஆயிரம் புத்தகங்கள் எரிக்கப்பட்டது. இதற்கான காரணகர்த்தாககள ஜேவிபி அல்ல யார் என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்தவகையிலே, வரலாற்றை தேடிப் பார்க்கின்ற போது அன்று ஏற்பட்ட கரும்புள்ளி இன்றும் எமக்கு மாறவில்லை எனவும்  கடற்றொழில் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் மேலும் தெரிவிக்கையில்…   

NO COMMENTS

Exit mobile version