Home இலங்கை அரசியல் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு

0

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி
ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தல்கள் 

மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். மனுஷ
நாணயக்கார போன்றவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தற்போது தீர்ப்பு வந்துள்ள
நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடு மிகவும் அருவருக்கத் தக்கதாக இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வந்தாலும்
அவர் ஒரு நீதிமன்றத்தை அவமதித்து மனித உரிமை ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டு
ஒருவராகவே தான் பார்க்கப்படுகின்றது.

மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் எங்களுக்கு இந்த பணத்தினை செலவு
செய்ய வேண்டாம் இதை நாட்டின் நலனுக்காக பாவியுங்கள்.

பொய் பிரசாரங்கள்

தற்போது ரணிலின் கூட்டங்களில் நிற்பவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன்
போன்றவர்களும், அலிசப்ரி ரகீம் போன்ற தங்கம் கடத்தியவர்களே இன்று ரணிலுடன்
நிற்கின்றார்கள்.

வடகிழக்கு மக்களை ஏமாற்றுவதற்காக பல பொய்களை கூறுகின்றார்கள் 13 தருகிறோம்
என்று இருக்கிறார்கள் 13 பிரச்சினைகள் ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. 

தேர்தலை
மூலதனமாக வைத்துக் கொண்டு பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பாரம்பரிய தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்து,
தமது நலனுக்காகவே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனரே ஒழிய தமிழ் மக்களின்
நலனுக்காக அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version