எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் 60 முதல் 70 வீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
பெலவத்தையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிற்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குளில் 50 இலட்சம் வாக்குகள் பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்களினால் அளிக்கப்பட்டதால் கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளார்.
புதிய வாக்குகள்
சஜித்திற்கு கிடைத்த 55 இலட்சம் வாக்குகள் சஜித்திற்கு ஆதரவானது அல்ல எனவும் அது கோட்டாபயவிற்கு எதிரான வாக்குகள் எனவும் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சியைச் சாராத 80 இலட்சம் வாக்குகள் உள்ளதாகவும் 12 இலட்சம் புதிய வாக்குகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 70 இலட்சம் வாக்குகளை இலகுவில் பெற்றுக்கொள்ளும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.