Home இலங்கை அரசியல் வரவு செலவுத் திட்டம் என்றால் என்ன என்பதை காட்டுவோம்! சமன்த வித்தியாரட்ன

வரவு செலவுத் திட்டம் என்றால் என்ன என்பதை காட்டுவோம்! சமன்த வித்தியாரட்ன

0

வரவு செலவுத் திட்டம் என்றால் என்ன என்பதை இம்முறை வரவு செலவுத் திட்த்தில் காண்பிப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்புத்துறை அமைச்சர் சமன்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

வரவு செலவுத் திட்டம்

கடந்த அரசாங்கங்களைப் போன்றல்லாது சம்பள அதிகரிப்பினை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் தடவையாக அரசியல்வாதிகளின் சம்பளங்களைக் குறைத்து அவற்றை பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version