Home இலங்கை அரசியல் நீதி அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம் : சாமர சம்பத் எம்.பி சூளுரை

நீதி அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம் : சாமர சம்பத் எம்.பி சூளுரை

0

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் நீதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.எனவே எனறோ ஒருநாள் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு(harshana nanayakkara)  சிறைச்சாலையில் ஜம்பர் அணிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க(chamara samoath dassanayake) சூளுரைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதிகளை அவமதித்த நீதியமைச்சர்

“ நீதி அமைச்சர் , நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியால்தான் மகிந்தானந்த சிறைக்குள் சென்றார் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான காணொளி தொலைக்காட்சியில் வெளியானது. நீதிபதிகள் மூவர்தான் தீர்ப்பை வழங்கி இருந்தனர். அவர்களை அவமதிக்கும் வகையில் நீதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

நிச்சயம் ஜம்பர் அணிவிக்கப்படும்

நீதிமன்றத்தை அவமதித்துள்ள அவருக்கு நிச்சயம் ஜம்பர் அணிவிக்கப்படும். நீதிமன்றத்துக்கு எதிராக கதைத்ததால் எஸ்.பி. திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு ஜம்பர் அணிவிக்கப்பட்டது. எனவே, உங்களுக்கும் (நீதி அமைச்சர்) நிச்சயம் ஜம்பர் அணிவிப்போம். என்றாவது ஒருநாள் அதனை செய்வோம்.” – என தெரிவித்தார்.

இதேவேளை ‘ நான் ஆற்றிய உரையில் ஒரு பகுதியை மட்டுமே தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் முறையிடலாம். எதிரணிகள் போலி பிரசாரத்தை கைவிடவேண்டும்.” – என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version