சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி
பாலம், குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக இரவு முதல் (29) வெள்ள நீர் ஊடறுத்துப்
பாயத் தொடங்கி நீர் பரவுகிறது.
இதனால் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்ட
நிலையிலும் அத்திதவசிய தேவை கருதி கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின்
குட்டிக்கராச்சி பாலம் ஊடாக கிண்ணியா நகர சபையின் ஏற்பட்டில் டெக்டர்
இயந்திரம் மூலமான போக்குவரத்து இடம் பெற்று வந்த போதும் நீர் மட்டம்
உயர்வடைந்ததால் தடைப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அத்தியவசிய தேவை ஏற்பட்டால்
படகு சேவை இடம் பெறும் என கூறப்படுகிறது.
குறித்த கரையோரங்களை அண்டிய பகுதிகளின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
