Home சினிமா 25வது வாரத்தில் டிஆர்பியில் கெத்து காட்டிய தமிழ் சீரியல்கள்… மாற்றம் ஏற்பட்டதா?

25வது வாரத்தில் டிஆர்பியில் கெத்து காட்டிய தமிழ் சீரியல்கள்… மாற்றம் ஏற்பட்டதா?

0

சீரியல்கள்

மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய மறக்கிறார்களோ இல்லையோ சீரியல்களை மட்டும் பார்ப்பதை நிறுத்துவதில்லை.

ஒரு நாள் சீரியலை பார்க்கவில்லை என்றாலும் தவித்துவிடுகிறார்கள்.
இதனால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து புத்தம் புதிய சீரியல்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

சரி நாம் இந்த பதிவில் கடந்த வாரம் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர்களின் டிஆர்பி விவரத்தை காண்போம்.

டாப் 5

சன் டிவி டிஆர்பியில் மாஸ் காட்ட கடந்த வாரம் ஹிட்டாக ஒளிபரப்பாகிய மூன்று முடிச்சு மற்றும் மருமகள் தொடர்களின் மகா சங்கமத்தை ஒளிபரப்பினார்கள்.

இந்த மகா சங்கமம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. 10.07 பெற்று மூன்று முடிச்சு-மருமகள் சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து 2வது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது, ஆனந்தி கர்ப்பமான விஷயம் இன்னும் வெளிவராத ரகசியமாகவே உள்ளது.

கயல் சீரியல் எந்த ஒரு பரபரப்பு கதைக்களமும் இல்லாமல் சாதாரண எபிசோடாக ஒளிபரப்பானாலும் 9.58 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.05 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக தொடங்கிய அய்யனார் துணை சீரியல் 7.78 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.  

Source: https://cineulagam.com/article/week-25-tamil-serials-trp-ratings-details-1751544071

NO COMMENTS

Exit mobile version