Home இலங்கை சமூகம் தெற்கில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கு யாழில் அமோக வரவேற்பு!

தெற்கில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கு யாழில் அமோக வரவேற்பு!

0

தெற்கில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகளுக்கு யாழில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று
வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதே இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு

 யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி
விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு
அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்
பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி யாழ்ப்பாணம் பிரதேச
செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்
எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version