Home இலங்கை அரசியல் வரவு செலவுத் திட்டம் ஒரு புஷ்வானம்.. எதிர்க்கட்சியின் விமர்சனம்

வரவு செலவுத் திட்டம் ஒரு புஷ்வானம்.. எதிர்க்கட்சியின் விமர்சனம்

0

ஜனாதிபதியின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு புஷ்வானம் ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“2025ஆம் ஆண்டு நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தனர். ஆனால் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை.

ஒன்றும் ஆகப்போவதில்லை

அதேபோலவே, 2026 ஆம் ஆண்டையும் பொய்யாலும் புரட்டாலும் ஏமாற்றத்தாலும் கொண்டு செல்வார்கள்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்ப மாட்டோம். இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version