Home இலங்கை சமூகம் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை! வெளியான அறிவிப்பு

மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை! வெளியான அறிவிப்பு

0

நாட்டு மக்களுக்கு அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனை அறிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் குறைக்கப்படும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவு

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்களுக்குப் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version