முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்.
மூத்த அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் நேற்று (02) காலமானார்.
1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த இவர் தனது 96 ஆவது வயதில் காலமானார்.
பதவி
ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரதம அமைப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, 2010 – 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.