Home இலங்கை சமூகம் 750 இலட்சம் நிதி மோசடி: நாமல் உள்ளிட்ட தரப்புக்கு எதிராக சிஐடி-யில் முறைப்பாடு

750 இலட்சம் நிதி மோசடி: நாமல் உள்ளிட்ட தரப்புக்கு எதிராக சிஐடி-யில் முறைப்பாடு

0

கொழும்பு(Colombo) கோட்டையில்(Fort) கட்டப்பட்டு கைவிடப்பட்ட கிரிஷ் (Krish – The One Transworks) கட்டிடத்தில் 5 வீடுகளை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடானது நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை கொள்வனவு செய்துள்ளமையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) தலைவராக இருந்த அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்யாலங்கவைரவுக்கு எதிராகவே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

750 இலட்சம்

ரவி வித்யாலங்கார தன்னிடம் இருந்து 750 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த தொகையை ஏமாற்றியதாக வர்த்தகர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, திலினி பியூமாலி உள்ளிட்டோரும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தாம் இதற்கு முன்னர் 7 வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 15 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version