Home இலங்கை குற்றம் வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை: எழுந்துள்ள கடும் கண்டனம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை: எழுந்துள்ள கடும் கண்டனம்

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள், பிரதேச சபைத் தலைவரிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சபைக்குள் நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே கண்டனங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,

அரசியல் அடக்குமுறை

அரசாங்கம் இப்போது அரசியல் அடக்குமுறையைத் தொடங்கியுள்ளதா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

சிறிது நேரத்திற்கு முன்பு, வெலிகம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் கூட, அரசாங்கத்தின் குண்டர்கள் ஒரு பெரிய பிரச்சினையை உருவாக்கினர்.

நாட்டில் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது, அவரின் அலுவலகத்திற்கு வந்து அவரைச்சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த அரசாங்கம் எம்.பிக்களுக்கு நிதியுதவி அளிக்கவோ பாதுகாக்கவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version