Home இலங்கை அரசியல் வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை -அரசின் மீது சந்தேகம் எனும் முன்னாள் அமைச்சர்

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை -அரசின் மீது சந்தேகம் எனும் முன்னாள் அமைச்சர்

0

லசந்த விக்ரமசேகரவின் படுகொலை, அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இந்த சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற தலைவரின் படுகொலை

உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பு இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டதையும், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அதிகாரத்தைப் பெறுவதற்காக பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெற்றிகொள்ள தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாகவும், வேறு தந்திரோபாயங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில் வெற்றி பெற்ற தலைவரின் படுகொலை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version