Home இலங்கை சமூகம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நேர்ந்த துயரம் !

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நேர்ந்த துயரம் !

0

இலங்கைக்கு (Sri Lanka) சுற்றுலா வந்த நெதர்லாந்து (Netherland) நாட்டைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டவர்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொஸ்லந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெல்லவாய பெரகல வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதனடிப்படையில், நெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுடைய லோனி ஹைமன்ஸ் தனது காதலனுடன் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆதார வைத்தியசாலை

அத்தோடு, குறித்த பெண்ணே இந்த முச்சக்கரவண்டியை ஓட்டியதாக தெரிவிக்கப்படுவதுடன் தியலும நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞனும் பெண்ணும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கொஸ்லந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version