Home இலங்கை சமூகம் திசைகாட்டியின் வெற்றி தொடர்பில் வஜிர வெளியிட்ட தகவல்

திசைகாட்டியின் வெற்றி தொடர்பில் வஜிர வெளியிட்ட தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி குறித்து பெரு மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள்

கடந்த காலங்களில் ஆட்சி செய்த எந்தவெரு அரசாங்கத்தினாலும் வெற்றி கொள்ள முடியாத வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளையும் இந்த அரசாங்கம் வென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் என்ற ரீதியில் தேசிய மக்கள் சக்தி அடைந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலேயே அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/wer-are-very-happy-about-election-results-unp-1731809687

NO COMMENTS

Exit mobile version