Home விளையாட்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் அமோக வரவேற்பு

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் அமோக வரவேற்பு

0

மேற்கிந்திய தீவுகள் (West Indies) அணி வீரர்களுக்கு இங்கிலாந்தில் (England) சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்தை வந்தடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் (Buckingham Palace) சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மன்னர் 

இதன்போது பிரித்தானிய மன்னர் சார்ள்சுடன் (Charles III) மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கிரைக் பிராத்வைட் (Kraigg Brathwaite) தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரதி தலைவர் பொறுப்பு அல்சாரி ஜோசேப்பிற்கு (Alzarri Joseph) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/west-indies-cricketers-at-buckingham-palace-1720435413

NO COMMENTS

Exit mobile version