Home இலங்கை சமூகம் யுத்தத்திற்கு பின்னர் மட்டக்களப்பில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து சேவை

யுத்தத்திற்கு பின்னர் மட்டக்களப்பில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து சேவை

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை வரையில் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை
ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதிக்கும் எழுவாங்கரைப் பகுதிக்குமான
பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதை
இடம்பெற்று வருகின்றது.

இப்படகு பாதையில் பயணம் செய்யும் பயணிகள் மட்டக்களப்புக்குச் செல்வதாயின் நிறைய சிரமத்தின் மத்தியில் அதிக செலவு
செய்து தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு: மன்றில் இல்லாமல் போன சாட்சியம்

விடுக்கப்பட்ட கோரிக்கை 

இந்நிலையில், இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி
இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (Pillayan) முன்வைத்த கோரிக்கைக்கு
இணங்க குருமண்வெளி துறையிலிருந்து குறித்த பேருந்து சேவை
மகிழூர், எருவில், கிராமங்களுடாக மட்டக்களப்பு வைத்தியசாலை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், இலங்கை
போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும்
இணைந்திருந்தனர்.

யுத்தகாலத்தின் போது குறித்த போரந்து சேவை இடம்பெற்று வந்தபோதிலும்
பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், அப்பகுதி மக்களும், குருமண்வெளி –
மண்டூர் படகுப் பாதையைப் பயன்படுதிவரும் பயணிகளும், விவசாயிகளும் மிகுந்த
சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், தற்போது இப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்
பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு இச்சேவையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர்
சந்திரகாந்தன் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது

[MVHKMHJ

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version