Home இலங்கை அரசியல் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

வியாபாரமாக மாற்றப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

0

வியாபாரத்துக்கான முதலீடாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மாற்றப்பட்டமையே
தீர்வுகளை எட்டமுடியாதிருக்க காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர்
சிறீரங்கேஸ்வரன் (Sirirangeswaran) சுட்டிக்காட்டியுள்ளார். 

யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் இன்றையதினம் (26.04.204) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எமது நாட்டைப் பொறுத்தளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமென்பது பெரும் பேசுபொருளான ஒரு விடயமாக உள்ளது.

முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம்: அரசாங்க அதிபரின் உறுதி

தீர்வு எட்ட முடியா நிலை 

தற்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் ஒரு சிலரது சுயநலத்துக்காக சர்வதேசத்தை
நோக்கிய வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவலங்களுடனும் ஏக்கத்துடன் இன்றும் இருக்க வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு விட்டது. 

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும்
கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால், பாதிக்கப்பட்ட உறவுகள் அதை நோக்கி சரியாக தமது கோரிக்கைகளை முன்னெடுத்திருந்த
போதிலும் ஒரு சில சுயநல அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின்
உணர்வுகளை வியாபாரமாக்கி விட்டுள்ளதன் வெளிப்பாடே இதுவரை எந்தவொரு தீர்வையும்
எட்ட முடியாதிருக்கின்றது.

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு

 சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை

அதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள
அறிக்கையில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறிதளவேனும்
முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், 1983ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான காலப்பகுதிககுள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு
உண்மையாகவே பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து எத்தகைய ஆதரவு அல்லது
ஒத்துழைப்புகள் கிடைத்திருக்கின்றது என்பதே இங்கு பார்க்கப்பட வேண்டிய முக்கிய
விடயமாக உள்ளது.

அதேவேளை, 1995களில் நாம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்
என்பதற்காக அதாவது
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில், பல்வேறு
அழுத்தங்கள் இருந்தபோதிலும் அவற்றை உடைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான
பாதுகாவலர் சங்கத்தை அமைத்து உறவுகளை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டிருந்தோம்.

ஒருமித்து குரல்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ் தேசிய கட்சிகள்: அரியநேத்திரன் ஆதங்கம்

சுயநல அரசியல் குழு

காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெற்றோர்கள் இன்றும் தமது பிள்ளைகள்
வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டங்களையும் கோரிக்கைகளையும்
முன்னெடுத்து வருகின்றனர். அது அவர்களது உணர்வுடன் கூடிய விடயம்.

ஆனால், அதை கொச்சைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டுக் குழு அல்லது சங்கம் என்று
கூறி அவர்களது கட்டமைப்புக்குள் உள்நுழைந்த சுயநல அரசியல் குழுவினர் அவர்களது
வலிகளையும் வேதனைகளையும் தமக்கான அரசியல் வியாபாரத்தின் முதலீடாக்கி வருமானம்
ஈட்டும் ஒரு மையப்பொருளாக அந்த போராட்டத்தை திசைவழிமாறச் செய்துவிட்டனர்.

அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளது உணர்வுகளுக்கு
மதிப்பளித்து சுயநலன்களையும் அரசியல் இலாபங்களையும் குறித்த தரப்பினர்
கைவிட்டு தீர்வுகளையும் பரிகாரத்தையும் தேடிகொள்ளும் வகையில் அந்த உறவுகளுக்கு
ஒத்துழைப்பது அவசியம்” என வலியுறுத்தியுள்ளார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில்

மேலதிக தகவல் : கஜி 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version