Home இலங்கை அரசியல் வலுக்கும் அனுர – சஜித் விவாத பேச்சு: சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பறந்த கடிதம்

வலுக்கும் அனுர – சஜித் விவாத பேச்சு: சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பறந்த கடிதம்

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) இடையிலான விவாதத்திற்கு நடுவராக செயற்பட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) இந்த அஸ்ளைப்பினை கடிதம் மூலம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு விடுத்துள்ளார்.

குறித்த விவாதத்தை ஒழுங்கமைப்பதற்காகவும் ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்: அடித்து கூறும் விமல்

நளின் பண்டாரவின் வலியுறுத்தல்

அதேவேளை, விவாதத்திற்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் வேறு அலுவல்கள் இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கட்சிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுக்களும் நேரடி விவாதம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்று நளின் பண்டார வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி! அம்பலப்படுத்தும் பொன்சேகா

மக்கள் அணிதிரளும் நாளாக மே தினத்தை மாற்றிடுவோம் : தேசிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version