Home முக்கியச் செய்திகள் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! பிள்ளையானுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது எப்படி

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை! பிள்ளையானுக்கு மட்டும் அனுமதி கிடைத்தது எப்படி

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பு என அரசாங்கம் கூறிவரும் வேளையில் பிள்ளையானின் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்ற பெயர் பிரதிசெய்ய முடிந்தது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 47வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு: ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

தந்தை செல்வா 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கை அரசியல் தந்தை செல்வா விட்ட அடித்தளம்தான் இன்று வரையில் தமிழ் தேசிய அரசியலில் நாங்கள் ஒரு கூர்மைபெற்றவர்களாக இருக்கின்றோம்.

தந்தை செல்வா என்னும் மகான் பிறக்காமலிருந்திருந்தால் அல்லது அவர் பிறந்து தமிழரசுக்கட்சியை வடமாகாணத்துடன் மட்டுப்படுத்தியிருந்தால் இன்று மட்டக்களப்பில் நாங்கள் பேரினவாத கட்சிகளுக்கு சோரம்போயிருப்போம்.

தந்தை செல்வா அவர்களினால் செ.இராசதுரை மற்றும் சீ.மு.இராசமாணிக்கம் ஆகியோரை இனங்கண்டு தமிழரசுக்கட்சிக்கு கொண்டுவந்ததன் காரணமாகவே இந்த மாவட்டம் இன்று தமிழ் தேசிய பரப்பில் விரிந்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி ஏழு தசாப்தமாக தமிழ் மக்களை ஏமாற்றிவருவதாகவும் எதுவும் செய்யவில்லையென சிலர் தெரிவித்துவருகின்றனர்.

கொழும்பில் பல பகுதிகளில் 14 மணித்தியால நீர் வெட்டு!

விடுதலைப் போராட்டத்தில்

இவ்வாறு கூறுகின்றவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக அரசியலுக்குள் வந்தவர்கள்தான்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று பேரினவாத கட்சிகளுடன் உள்ள பிள்ளையானாக இருக்கலாம், வியாழேந்திரனாக இருக்கலாம் அல்லது தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகயிருக்கலாம் இலங்கை தமிழரசுக்கட்சி என்ற நாமம் இல்லாவிட்டால் அவர்கள் இன்று அரசியல் முகவரியற்றவர்களாக இருந்திருப்பார்கள்.

விடுதலைப் போராட்டத்திலே இணைந்து கொண்டவர்கள் தான் இன்று அந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்த கட்சியினுடைய பெயரை பிரதி செய்து கொண்டு அரசியல் செய்கின்றார்.

இப்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறுவோமாக இருந்தால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கம் என கூறுகின்றார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக உண்மை

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எவ்வாறு இலங்கையிலே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக இருக்கின்றது என்கின்ற உதாரணத்தை கூற விரும்புகின்றேன்.

அரசாங்கத்துடன் காட்டி கொடுத்து அல்லது அரசாங்கத்திற்கு சோரம் போய் அரசாங்கத்துக்கு சார்பாக எந்த பெயரும் வைக்கலாம்.

ஆனால் அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான உரிமைக்காக நாங்கள் போராடுகின்ற போது அந்த பெயரை பாவிக்க முடியாது இதுவே இன்று உள்ள யதார்த்தம்.

வியாழேந்திரன் கூறுகின்றார் 7 தசாப்தங்களாக இலங்கை தமிழரசு கட்சி மக்களை ஏமாற்றி விட்டது என கூறுகின்றார்.

அவர் ஒன்றினை விளங்கிக் கொள்ள வேண்டும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக முகவரி எடுத்ததன் காரணமாகத்தான் இன்று அவருக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது.

ஆகவே அவர் நன்றி கூற வேண்டியது தந்தை செல்வா அவர்களுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும்  இந்த வருடமானது ஒரு முக்கியமான வருடமாக கருதப்படுகின்றது.

தேர்தல்

ஏனெனில் வரும் காலங்களில் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம் அதில் முக்கியமாக அதிபர் தேர்தல் வர இருக்கின்றது.

இந்த தேர்தலில் முக்கியமாக மூன்று பேர் எல்லாமாக 8 வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று ஊடகங்களிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள.

இன்னும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடப் போகின்றார்கள் என நமக்கு தெரியாது. இலங்கை தமிழரசு கட்சியை பொருத்தமட்டில் இந்த தேர்தலில் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என உத்தியோகபூர்வமாக எதுவித முடிவுகளும் எடுக்கவில்லை.

எதிர்காலங்களில் மத்திய குழு கூட்டம் கூடுகின்ற போது நாங்கள் எடுக்கின்ற முடிவை மக்களுக்கு அறிவிக்கின்ற போது மக்கள் அந்த முடிவுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதனை தான் கூறுகின்றோம்.

இனப்பிரச்சினை

தந்தை செல்வாவின் 27வருடகால அரசியல் தலைவர் பிரபாகரனின் 32வருடகால அரசியலுக்கு பின்னர் தற்போதைய 15வருடகால அரசியல் இராஜதந்திர ரீதியாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அரசியல் அமைப்புகளுடனும் இங்குள்ள தமிழரசுக்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக நாங்கள் அரசியல் பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

இருக்கின்ற வேதனையென்னவென்றால் இருக்கின்ற தமிழ் தேசிய கட்சிகளாகிய நாங்கள் ஒருமித்து ஒரு குரலில் ஒன்றை கோரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இனிவரும் காலத்திலாவது தேர்தல் அரசியலுக்காக பிரிந்து நின்றாலும்கூட தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரே குரலில் கூறக்கூடிய நிலையினை ஏற்படுத்தவேண்டும் இதனை இந்த சிரார்த்த தினத்தில் வடகிழக்கில் உள்ள அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.” என குறிப்பிட்டார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/D-_xCblyPts

NO COMMENTS

Exit mobile version