Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய கட்டடம் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய கட்டடம் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு

0

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வானது, இன்று (26.04.2024) திருகோணமலையில் (Trincomalle) இடம்பெற்றுள்ளது. 

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையென கவலை தெரிவித்திருந்தனர்.

கிழக்கை மீட்போம் என கூறுபவர்கள் வாயளவில் மட்டும் பேசி அரசியலை மேற்கொள்கின்றனர்: சிறிநேசன் ஆதங்கம்

நிதி ஒதுக்கீடு 

மேலும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

அக்கோரிக்கைக்கு அமைய, ஆளுநர் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எவ்வித இன்னல்களும் இன்றி தங்களது கடமைகளை திறம்பட செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு

வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் – பன்றிக் கூடுகளில் வேலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version