மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், தான் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
அத்தோடு அவை ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று கூறியுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்,தனது பதவியை விட்டு விலகுவதாகவும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தொலைநோக்கு சிந்தனை
அது தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட ஹனிஃப் யூசுப்,
ஜனாதிபதியின் தொலைநோக்கு சிந்தனையில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
எவ்வித தடங்களும் அல்லது தயக்கமோ இல்லாமல் நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்,என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
