Home சினிமா ரஜினிகாந்த் விரும்பி சாம்பிடும் மற்றும் தவிர்க்கும் உணவுகள்.. என்னென்ன தெரியுமா? இதோ

ரஜினிகாந்த் விரும்பி சாம்பிடும் மற்றும் தவிர்க்கும் உணவுகள்.. என்னென்ன தெரியுமா? இதோ

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கூலி திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐந்து நாட்களில் ரீ ரிலீஸான படையப்பா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

திரையுலக பிரபலங்களின் லைஃப் ஸ்டைல் குறித்து அவ்வப்போது தகவல் வெளிவரும். இந்த நிலையில், ரஜினிகாந்த் விரும்பி சாம்பிடும் மற்றும் தவிர்க்கும் உணவுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு பிடித்த உணவுகள்

நடிகர் ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும் உணவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வத்த குழம்பை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம்.

அந்த வத்த குழம்பானது நன்றாக கெட்டியாக, வெயிலில் காய வைத்த காய்கறிகளுடன், புளி, மற்றும் மணத்தக்காளி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனை சூடான சாதம் மற்றும் நெய்யுடன் கலந்து அவர் எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

அடுத்ததாக பால் பாயசம். பால் கெட்டியாகி, தந்த நிறம் வரும் வரை சமைக்கப்படுகிறது. கிரீம் போன்ற சுவை வரும் வரை அது தயாரிக்கப்படுகிறது. அதற்கு பொறுமையாக இருந்து, சுட வைக்க வேண்டும்.

இதன்பின், ரஜினிக்கு மிகவும் பிடித்த உணவாக மாதுளை பழச்சாறு உள்ளது.

ரஜினிகாந்த் தவிர்க்கும் உணவு

நடிகர் ரஜினிகாந்த் தனது உணவுகளில் உப்பு, சர்க்கரை, மைதா, பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தவிர்க்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version