Home இலங்கை அரசியல் ரணிலின் தீர்க்கதரிசனம் உண்மையாகியுள்ளது : சுட்டிக்காட்டும் முன்னால் அமைச்சர்

ரணிலின் தீர்க்கதரிசனம் உண்மையாகியுள்ளது : சுட்டிக்காட்டும் முன்னால் அமைச்சர்

0

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe,) தெரிவித்த விடயம் தற்போது உண்மையாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி, தேங்காய் போன்ற அடிப்படை பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு,
ஆட்சியாளர்களின் அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாமையே காரணமாகும்.

இந்த நிலை ஏற்படும் என்பதாலே அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறும், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களுக்கு அனுபவம் மிக முக்கியமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தார்.

அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கடந்த பொதுத் தேர்தலின்போது அவர் தெரிவித்து வந்தபோது அவரை கேலி செய்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க அவ்வாறு தெரிவித்துவந்ததை திருட்டு நடவடிக்கையாக தெரிவித்து மக்களை ஏமாற்றிவந்தார்கள்.
தற்போது நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான செய்திகளுக்கு ஐபிசி தமிழின் மதிய நேர பிரதான செய்திகளை காண்க…

 

https://www.youtube.com/embed/ajv4ADe_3l4

NO COMMENTS

Exit mobile version