மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்கு சொந்தமான முன்னணி செயலியான வாட்ஸ்அப் (Whatsapp), கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக Reverse Image Search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகெங்கும் சுமார் 2 பில்லியன் பயணர்களை கொண்ட வாட்ஸ்அப் தொடர்ச்சியாகப் பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
வாட்ஸ்அப் செயலி தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. முதலில் தாவல் பரிமாற்றும் தளமாக மட்டும் இருந்த வாட்ஸ் அப், குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், ஸ்டோரி, யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்ததொழினுட்ப அப்டேட்களால் பயனர்களை ஈர்த்து, தற்போது உலகின் முன்னணி தகவல் பரிமாற்றும் தளமாக உள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள்
இந்நிலையில், Reverse Image Search எனும் அம்சம், வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சமானது, பயனர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்குரிய புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவும்.
WABetaInfoவின் தகவல்படி குறித்த அம்சம் விரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.