Home அமெரிக்கா “மெலானியா ட்ரம்ப்பை எங்கே கொல்வது” ஈரானின் அதிர்ச்சி காணொளி

“மெலானியா ட்ரம்ப்பை எங்கே கொல்வது” ஈரானின் அதிர்ச்சி காணொளி

0

ஈரானில் வெளியான காணொளியில் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மகன் பாரன் ட்ரம்பை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“Where to Kill Melania” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் காணொளியில், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் நியூயோர்க் நகரில் பயணிக்கும் காட்சிகள், அவர் வழக்கமாகச் செல்லும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் செய்யும் ஆடம்பர கடைகள் இடம்பெற்றுள்ளன.

எங்களுக்காக காத்திரு

அந்தக் காணொளியில், மெலனியா ட்ரம்ப் வாங்கும் ஆடைகளில் நரம்பு நச்சுப் பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம் என்ற வகையிலான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளியின் இறுதியில், “இது ஆரம்பம் மட்டுமே. பாரன் ட்ரம்ப், எங்களுக்காக காத்திரு” என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில், மெலனியா ட்ரம்ப் மற்றும் பாரன் ட்ரம்புக்கு அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) 24 மணி நேர பாதுகாப்பு வழங்கி வருகிறது.

மேலும், வெள்ளை மாளிகை, நியூயோர்க் ட்ரம்ப் டவர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் புளோரிடாவின் மார்அ-லாகோ உள்ளிட்ட ட்ரம்ப் குடும்பத்தின் அனைத்து முக்கிய சொத்துகளும் கடுமையான பாதுகாப்பின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எச்சரிக்கை வாசகங்கள்

இதனுடன், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பழிவாங்கும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், தாம் இன்னும் ஈரானின் முக்கிய இலக்காக இருப்பதாக நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், தமக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்கூட்டியே உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/where-kill-melania-trump-video-threat-iran-warning-1785262248

NO COMMENTS

Exit mobile version