Home இலங்கை சமூகம் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் கற்றாழை….! வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா

செல்வச் செழிப்பை அள்ளித்தரும் கற்றாழை….! வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா

0

அழகு, ஆரோக்கியம் என்பவற்றை எல்லாம் தாண்டி வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற ஒன்றாக கற்றாழை விளங்குகின்றது என்பது எங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

கற்றாழைச் செடியினை வீட்டில் வளர்ப்பதால் செல்வச் செழிப்புக்கு குறைவிருக்காது என்பது ஐதீகம், இதனால் பலர் தங்கள் வீடுகளில் கற்றாழையை வளர்க்கிறார்கள், வாஸ்துப் படி, ஜேட் செடியைப் போலவே ஒரு அதிர்ஷ்ட செடியாக கற்றாழை விளங்குகிறது.

பல மருத்துவ குணங்கள் கொண்டு கற்றாழைச் செடி இருப்பதால் இந்தச் செடியை வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கிழக்குத் திசை

வாஸ்துப் படி வீட்டில் கற்றாழை வளர்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, இந்தச் செடியை வீடுகளில் நடும் போது சில விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும் செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால் குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.

வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் செல்வமகளின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்குத் திசையில் தான் நட வேண்டும். இந்தத் திசையில் நடப்படும் ஒரு கற்றாழை மன அமைதியைத் தருகிறது.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டும் என்றால் எப்போதும் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம். இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அசுப பலன்கள்

அதேபோல் கற்றாழைச் செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது. நீங்கள் நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம்.

தவிரவும் இது வீட்டில் வளர்க்க எளிதான மற்றும் சிறந்த தாவரங்களில் ஒன்றாகும். அதிக அளவில் பராமரிப்பும் தேவையில்லாத ஒரு தாவரம் என்பதால் எளிதில் வளர்க்க முடியும்.

வீட்டின் முன் முகப்பில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது, கற்றாழைச் செடி எளிதாக வளரும் ஒன்றை நட்டால் பல வளரும். அதனால் தான் சாடியில் ஒரே ஒரு செடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேவேளை, எக்காரணம் கொண்டும் வடமேற்கு திசையில் கற்றாழைச் செடி வைக்க கூடாது, அப்படி வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்துப் படி இந்த திசை நிதி சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும் என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
 

NO COMMENTS

Exit mobile version