ஒரு விசில் சத்தத்தால் மொட்டு கட்சிக்கு ஆதரவாக மக்களை திரட்ட முடியும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய அரசாங்கம் எங்களுக்கானது அல்ல. எங்கள் மக்கள் கிராமங்களில் பணியாற்றியவர்கள்.
நாட்டின் வளர்ச்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாக பங்களித்தவர்கள் நாங்கள்.
ஒரு விசில் சத்தத்தால் எங்களுடன் ஒன்றிணையக்கூடிய ஒரு சிறிய குழு எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
