Home இலங்கை அரசியல் யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

யார் இந்த டேன் பிரியசாத்..! வெளியாகும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

0

இலங்கையில் தற்போது அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட விடமானது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில் டேன் பிரியசாத் யார், அவரின் பின்னணி என்ன என்ற விடயங்களை சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துக்கொண்டார்.

”2022ஆம் ஆண்டு காலிமுத்திடலில் மே18 முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு நினைவுதினத்தை முன்னெடுத்திருந்தோம்.

அதனை தொடர்ந்து அடுத்தவருடமும் பொரளை மயானத்திற்கருகே இதேபோன்றதொரு நினைவேந்தலை முன்னனெடுத்திருந்த 100ந்கும் மேற்பட்ட அடிதடியில் ஈடுபடுபவர்கள் டேன் பிரயசாத்துடன் வந்திருந்தார்கள்.

அங்குபெரும் கலவரத்தை நடத்த முயற்சி செய்தார்கள், அங்கிருந்த மாலைகளையும், விளக்ககுகளையும் எட்டி உதைத்தார்கள்.

அப்போது டேன் பிரயசாத் எங்களை நோக்கி இனவாத கருத்துக்களை வீசிக்கொண்டிருந்தார்.

 நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தவர்கள் என்று கூறினார்.

இதை அத்தனையும் அங்கிருந்த பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என சுட்டிக்காட்டினார்”

இந்த விடங்கள் தொடர்பான முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்… 

NO COMMENTS

Exit mobile version