Home இலங்கை அரசியல் இசைப்பிரியா பெண் இல்லையா..!! நாடாளுமன்றில் சாணக்கியனின் ஆவேசப் பேச்சு

இசைப்பிரியா பெண் இல்லையா..!! நாடாளுமன்றில் சாணக்கியனின் ஆவேசப் பேச்சு

0

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு கொந்தளிக்கவில்லை.

மோசமான இனவாதிகள்

இனவாதம் இல்லை என்று சொல்லும் இந்த அரசாங்கம் தான் மோசமான இனவாதிகள்.

கடந்த கால அரசாங்கங்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமது செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் இனவாதம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க இனவாதத்தில்தான் ஈடுபடுகிறார்கள்

  

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவுக்கு இந்த நாட்டிலே நீதி தேவையில்லையா எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version