Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார்…! தொடரப் ​போகும் மர்மம்

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார்…! தொடரப் ​போகும் மர்மம்

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மொட்டுக் கட்சியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில்லை என்று பசில் ராஜபக்‌ச (Basil Rajapaksa) தீர்மானித்துள்ளார்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) மொட்டுக் கட்சியின் ஆதரவை வழங்கும் தீர்மானம் குறித்து நாமல் ராஜபக்‌ச(Namal Rajapaksa), டீ.வி. சானக, திஸ்ஸ குட்டியாரச்சி, டப்.டீ.வீரசிங்க போன்றே இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் வழிப்பறிக் கொள்ளையில் முதலிடம் பிடித்த நாடு

மொட்டுக் கட்சியின் வேட்பாளர்

அது மாத்திரமன்றி மொட்டுக் கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்‌சவை களமிறக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதன் காரணமாக தற்போதைய பரபரப்பான சூழலை தணிக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை கட்சியின் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் வரையிலும் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் தாமதிக்க பசில் ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார்.

எனினும் மொட்டுக் கட்சியின் மே தினப் பேரணியின் போது நாமலை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த ​வேண்டும் என்ற கோஷங்களை முன்வைக்க அவருக்கு ஆதரவான தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை செய்த பஞ்சாப் அணி

இனப்படுகொலை செய்த கோட்டாவை ஆதரித்த மல்கம் ரஞ்சித்! : சபையில் கஜேந்திரன் ஆவேசம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version