Home இலங்கை அரசியல் தமிழர்களை பேரினவாத கட்சியை நோக்கி தள்ள வைத்தது யார்..! வெளியான முக்கிய தகவல்

தமிழர்களை பேரினவாத கட்சியை நோக்கி தள்ள வைத்தது யார்..! வெளியான முக்கிய தகவல்

0

கடந்த நாடாளுமன்ற தேர்திலில் ஒரு தேசிய பேரினவாத கட்சியை நோக்கி மக்கள் வாக்களிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.நாடே மாற்றத்திற்காக வாக்களிக்கும போது தமிழர்களும் நம்பி வாக்களித்தார்கள்.அது மிகப்பெரிய பேராபத்தில் முடியும் என்பதை தமிழ் மக்கள் தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

 இந்த உள்ளூராட்சி தேர்தல் களம் என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது.தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எதுவும் செய்யாத நிலையில் ஏற்பட்ட வெற்றிடமே தமிழ் மக்கள் பேரினவாத கட்சியை நோக்கி தள்ளப்பட்டார்கள்.தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதான கோபமே தமிழர்களை பேரினவாத கட்சியை நோக்கி தள்ள வைத்தது.

ஆனால் அந்த மாற்றம் பேராபத்தானது என்பதை தமிழ் மக்கள் தற்போதுதான் உணர தலைப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்.(murugesu chandrakumar)  உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்…

https://www.youtube.com/embed/HtPq06ZljLc

NO COMMENTS

Exit mobile version