Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத மக்கள்! தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத மக்கள்! தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதாவது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளின் எண்ணிக்கை 

இதேவேளை 13,619,916 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 300,300 எனவும் கூறியுள்ளார்.

மேலும் இம்முறை பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 17,140,354 என்பது குறிப்பிடத்தக்கது.  

Source: https://tamilwin.com/article/why-didn-t-3-5-million-people-vote-1727101015

NO COMMENTS

Exit mobile version