Home இலங்கை சமூகம் திருகோணமலையில் பௌத்த விகாரை மைதானத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் பௌத்த விகாரை மைதானத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0

திருகோணமலையில் (Trincomalee) பெளத்த மதஸ்தலம் ஒன்றின் மைதானத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிறி விஜயராம பெளத்த
மதஸ்தலத்தின் மைதானத்தில் இன்று (08) காலை குறித்த சடலம் உப்புவெளி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் திருகோணமலை,
சர்தாபுரத்தைச் சேர்ந்த 41 வயதான அமரசிங்க ஆராச்சிகே சுமித் என்பவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

சடலத்தைப் பரிசோதனை செய்த திருகோணமலை மாவட்ட சட்ட
வைத்திய அதிகாரி இது கொலையாக இருக்கலாம் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்ட வைத்திய அதிகாரியின்
மேற்பார்வையின் கீழ் உப்புவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/body-recovery-at-buddhist-monastery-grounds-trinco-1728383125

NO COMMENTS

Exit mobile version