Home இலங்கை அரசியல் ரணில் அரசாங்கத்தின் மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சரவை

ரணில் அரசாங்கத்தின் மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சரவை

0

Courtesy: Sivaa Mayuri

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களின் சேவையை நிறுத்துவதற்கு புதிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பது, தேசிய மக்கள் பேரவை ஒன்றை நிறுவுவது மற்றும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த முயற்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களை நியமித்தது.

அமைச்சரவை முடிவு

எவ்வாறாயினும், இந்த அலுவலகங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் எதிர்பார்க்கப்பட்ட செயற்பாடுகளை தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் கையாளக்கூடிய நிலையில் உள்ளன.

எனவே, 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் குறித்த மூன்று ஒப்பந்தங்களையும் முடிவுக்கு கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version