வடக்கு மாகாணத்தில் ஒரு போர் நிலவியதால் அங்கு அரசியல் தலைவர்களால் பாதாள உலகக் குழுக்களை உருவாக்க முடியாமல் போனதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் உள்ள பாதாள உலகக் குழுக்கள், ராஜபக்சர்கள், விக்ரமசிங்க மற்றும் பிரேமதாச ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் இருந்தபோதிலும், அவை பெரிதாக அதிகரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
குறைந்த மோதல்கள்
குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு ‘கோட்ஃபாதர்’ இருப்பதே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது, அந்தந்த அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே பிரதேசங்கள் பிரிக்கப்பட்டதால், கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைந்துவிட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
