Home இலங்கை சமூகம் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி

மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி

0

மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிடம் இன்றைய தினம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக உடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மாவீரர் நிகழ்வு

எனினும் இந்த மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு என் கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கெலும் ஹர்ஷன என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நபரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version