Home உலகம் கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே கடும் மோதல் :100 இற்கும் மேற்பட்டோர் பலி

கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே கடும் மோதல் :100 இற்கும் மேற்பட்டோர் பலி

0

கினியாவில் (Guinea) கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N’Zerekore இல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கினியாவின் N’Zerekore-இல் ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டியொன்று நடைபெற்றுள்ளது.

 உயிரிழந்தவர்களின் உடல்கள்

அந்த போட்டியில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் வன்முறை தொடங்கிய நிலையில் இதையடுத்து, ரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், N’Zerekore காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களிலும் உடல்கள் கிடப்பதாகவும் மற்றும் பிணவறை நிரம்பியுள்ளதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version