நாட்டில் புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கிலே அநுரவுக்கான ஆதரவு மேலோங்கிய நிலையில் உள்ளது.
அந்த வகையில், உள்ளுர் உற்பத்தி மற்றும் சந்தை நிலவரங்களோடு தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம் குறித்து கிளிநொச்சி – பளை சந்தைத் தொகுதியின் வியாபாரிகள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, இதுவரை காலமும் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்ட நிலையில் இனிவரும் காலத்திலாவது எமக்கான பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தாம் அநுரவுக்கு வாக்களித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நமக்கான விடிவு ஒன்று நிச்சயம் கிடைக்க வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு இவ்வளவு காலமும் வந்த உறுப்பினர்கள் தங்களது சுகபோகங்களை அனுபவிப்பதில் மட்டுமே உறுதியாய் இருந்துள்ளனர்.
ஆகவே, தற்போதுள்ள அரசாங்கமாவது எமக்கான விடிவை நிச்சயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக, பல தசாப்தங்களை கடந்து பெரும் துயரினை கடந்தலைந்த மக்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்……