எஸ்.ஜே. சூர்யா
தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே நடிகர் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா தான்.
மாநாடு, மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளிவந்த ராயன் என நடிப்பில் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறார்.
இவருடைய வசனம் பேசும் விதம், அடாவடியான நடிப்பு, அதனுடன் சேர்ந்து வரும் நகைச்சுவை என அனைத்துமே மக்களை கவர்ந்துவிட்டது.
வெளிவந்தது தளபதி 69 படத்தின் அதிரடி அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் ட்ரீட்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் வில்லனாக கமிட் ஆகியுள்ளார்.
தற்போது, கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படம் உருவாகி வருகிறது.
எதற்காக பாருங்க
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக, கெட்டப் சேஞ் செய்து சீன உளவாளி தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.