Home இலங்கை குற்றம் கணவனின் கொடூர தாக்குதலுக்கு பலியாகிய மனைவி!

கணவனின் கொடூர தாக்குதலுக்கு பலியாகிய மனைவி!

0

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவத்தில் வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Source: https://tamilwin.com/article/wife-killed-in-husband-s-attack-1749432767

NO COMMENTS

Exit mobile version