Home இலங்கை அரசியல் அநுர அலையின் பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கும் மற்றுமொரு முக்கிய அரசியல்வாதி

அநுர அலையின் பின்னர் அரசியலிலிருந்து ஒதுங்கும் மற்றுமொரு முக்கிய அரசியல்வாதி

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்;

இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மத நிகழ்வு ஒன்றின் பின்னர், அவரின் அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

பொதுக்கருத்து

ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுக்கருத்து, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது.

எனவே, அதன் பகுதியாக இருக்க தாம் விரும்பவில்லை என்று விஜயதாச குறிப்பிட்டுள்ளார். 

சட்டமியற்றுபவர்கள் மீது நிலவும் எதிர்மறையான கருத்துக்களால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான எந்த காரணத்தையும் தாம் உணரவில்லை என்றும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, தேர்தலின் முன்னரும் பின்னரும் பல அரசியல்வாதிகள், அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையிலேயே விஜயதாசவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version