Home இலங்கை அரசியல் ரணிலால் இன்று வெளியிடப்படவுள்ள விசேட அறிவிப்பு

ரணிலால் இன்று வெளியிடப்படவுள்ள விசேட அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டம் கடுவெல பகுதியில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டமொன்றில் ரணில் இந்த விடயத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றிணைந்து வெற்றியீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரசன்ன ரணதுங்க

நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமாக ரணில் விக்ரமசிங்க அறிக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்து வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version