அவுஸ்திரேலிய (Australia) அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma) தமது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உயர் அதிகாரிகளும், தேர்வாளர்களும் இந்த விடயம் தொடர்பில் ரோஹித் சர்மாவுடன் ஏலவே கலந்துரையாடியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டி
ரோஹித் சர்மா தமது தீர்மானத்தை மாற்றுவது சாத்தியமில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் ரோஹித் சர்மா அணியில் அங்கம் வகிப்பதற்கு விரும்பலாம் எனவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.