Home இலங்கை அரசியல் கட்சி முடிவெடுத்தால் ரணிலை ஆதரிப்பேன்: ஹிஸ்புல்லா எடுத்துரைப்பு

கட்சி முடிவெடுத்தால் ரணிலை ஆதரிப்பேன்: ஹிஸ்புல்லா எடுத்துரைப்பு

0

கட்சி முடிவெடுத்தால் நான் ஜனாதிபதியை ஆதரிப்பேன் எனவும், கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டுமென்று எந்த ஒரு உடன்படிக்கையும் சஜித் பிரேமதாசாவிடம் இல்லை என்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற வேண்டி தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியினால் வேண்டுமென்றே மீண்டும் ஒரு இன மோதலை
ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கட்சியின் தீர்மானம் இறுதி தீர்மானம்

உண்மையிலேயே நாட்டின் ஜனாதிபதியை அழைத்து எனது பல்கலைக்கழகத்தை மீட்டு தந்தவரை
திறந்து வைப்பதற்கு அழைத்த போது அவர் வருகைதந்தார்.

இதற்கும் அரசியலுக்கும்
எதுவித சம்பந்தம் இல்லை. எனது மகனின் திருமண வைபவத்தின் போது ஜனாதிபதி மற்றும் சஜித் அனைவரும் வந்திருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறான அரசியல் உறவுகளை
தவிர்க்க முடியாது.

நான் ஜனாதிபதியிடம் சொன்னேன். எனது கட்சி முடிவெடுத்தால் நான் உங்களை ஆதரிப்பேன்
என்று. எனது கட்சியின் தீர்மானம் இறுதி தீர்மானம் ஆகும்.

எனக்கும் அவருக்கும்
உறவில் எதுவித பிரச்சனை இருக்காது. அவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

தங்களது கட்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் எது
வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை” என்றார்.

NO COMMENTS

Exit mobile version