Home இலங்கை அரசியல் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

0

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்தது

2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலாபம் ஈட்டிய மின்சாரசபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்தது என்றும் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.

மேலும், மின்சார சபையை அகற்றி விற்பனை செய்யும் பணி அடுத்த மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற சூழ்நிலையில், மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். 

NO COMMENTS

Exit mobile version