Home உலகம் விதிமீறல்களுககு இடையே நீடிக்கும் போர் : ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

விதிமீறல்களுககு இடையே நீடிக்கும் போர் : ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0

லெபனான் (Lebanon) நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை (Hezbollah) இஸ்ரேல் (Israel) வலியுறுத்தியுள்ளதக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருகினறனர்.

இஸ்ரேல் எச்சரிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் திகதி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் (05.01.2025) இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள், படிப்படியாக வெளியேறும் என்றும், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதி பாதுகாப்பினை ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என்பது தான் போர் நிறுத்த ஒப்பந்தம்.

“லெபனான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்த இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

ஹிஸ்புல்லா

ஆனால், இந்த ஒப்பந்தத்தின் முதல் நிபந்தனையாக உள்ள தெற்கு லெபனானின் லித்தானி ஆற்று பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை முழுவதுமாக அகற்றுவது, அந்த நாட்டு ராணுவம் பாதுகாப்பினை உறுதி செய்வது போன்றவை இன்னும் நடக்கவில்லை” என  இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவதா இல்லையா என்பதை தங்கள் அமைப்பு தான் முடிவு செய்யும் என கடந்த சனிக்கிழமை ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version